ரூ.15 லட்சம் எங்கே? பாஜகவை எதிர்த்து ஆட்சியே கவிழ்ந்தாலும் கவலையில்லை - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
CM MK Stalin Say About Modi Block money speech and BJP Manifesto
வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று 2014 தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி பேசி இருந்ததை சுட்டிருக்கட்டிய முதல்வர் ஸ்டாலின், ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ஆயிரமாவது கொடுத்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசுவின் இல்ல திருமண விழாவில் இன்று கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், மணமக்களை வாழ்த்தியபின் நிகழ்ச்சியில் பேசியதாவது, "நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும்.
![](https://img.seithipunal.com/media/stalin jksdkl.png)
2014ல் பாஜக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றியதா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று சொன்னார்கள். செய்தார்களா?
வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று மோடி பேசினார். ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ஆயிரமாவது தந்தார்களா?
விவசாயிகள் நலன் காப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, டெல்லியில் விவசாயிகள் மழையிலும், வெயிலிலும் போராடிய போது கண்டுகொள்ளாமல் இருந்தது.
![](https://img.seithipunal.com/media/mk stalin medical science conference 1-bgh8y.png)
வேறு வழியின்றி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது இந்த பாஜக அரசு. இந்த சர்வாதிகார பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இந்த சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/stalin 12454212-sz3ar.png)
பாஜகவை எதிர்ப்பதால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், "தமிழக அரசின் மகளீர் உரிமை தொகை திட்டம் அமலுக்கு வருவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
English Summary
CM MK Stalin Say About Modi Block money speech and BJP Manifesto