2000 ரூபாய் நோட்டு! சந்தேகம், மர்மம்! ஒருவேளை அப்படி இருக்குமோ? ஸ்டாலின் டிவிட்!
CM MKStalin 2000 Rupees Note
கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே, 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியாகி இருக்கலாம் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.
இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒரு நபர் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரை மட்டுமே வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். வரும் மே 23ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து கணக்கில் வர வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்து டிவிட்டர் பக்கத்தில்,
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
CM MKStalin 2000 Rupees Note