ஆம்ஸ்ட்ராங் படுகொலை: பேரதிர்ச்சி, பெரும் வருத்தம் - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
CM MKStalin Condolence Armstrong
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும், பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாக கைது செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM MKStalin Condolence Armstrong