#புதுக்கோட்டை || மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலர், பார்வையாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுமுட்டி உயிரிழந்த காவலர் மற்றும் பார்வையாளர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூரில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில இருந்த மீமிசல் காவல் நிலைய காவலர் நவநீதிகிருஷ்ணன், மாடு முட்டியதால் உயிரழந்தார். இந்நிலையில், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதலமைச்சர், ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

மேலும் மஞ்சுவிரட்டு போட்டியினை பார்த்துக்கொண்டிருந்தபோதுமாடுமுட்டியதில் உயிரிழந்த திருமயம் தாலுகா, கே.புதுப்பட்டியைச் சேர்ந்த திரு.சுப்ரமணியம் (வயது 30) குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM provides financial assistance to the family of the policeman and audience who died in Manjuvirattu in Pudukkottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->