துபாய், அபுதாபி சுற்றுப்பயணம் முடித்து, நாளை சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நான்கு நாள் பயணமாக சென்ற அவர் துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

முதலில் துபாய் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்தார். பின்னர் அபுதாபி சென்று அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.

நான்கு நாட்கள் மேற்கொண்ட பயணத்தை முடித்துகொண்டு நாளை அதிகாலை 2 மணி அளவில் முதலமைச்சர் சென்னை வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM returning to chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->