தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களை கண்காணிக்க புதிய இணையதளம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் கீழ் 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றை கண்காணிக்க புதிய இணையதளம் ஒன்றை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். நிதித்துறை சார்பில் www.ccfms.tn.gov.in என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று புதிய தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைக்கான தொடக்க நிதியம் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியம் தமிழக அரசின் நிதித்துறை மற்றும் தொழில்துறை கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் முதலீடுகள் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கு முதலீடு அனுமதி கடிதங்களை முதல்வர் நேற்று மு.க ஸ்டாலின் வழங்கியுள்ளார். இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வோம் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM stalin launched new website to monitor public sector organizations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->