தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை.. முதலமைச்சர் மு க ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சரியாக பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூற்றாண்டுகள் ஆகும். 

அதிகப்படியாக இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி பாதிப்படைந்துள்ளது. மேலும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட நமது சுற்றுச்சூழல் அமைப்பின் அமைப்பின் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் ஏற்படுத்தி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமுலில் உள்ளது. எனினும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது ஆங்காங்கே தொடர்ந்து கொண்டே உள்ளது. 

இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin launches again yellow bag plan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->