இதற்க்கு ''முற்றுப்புள்ளி'' வைத்து விட்டோம் என்ற நிலை வேண்டும் - முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் 14 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருப்பதாவது, 

புதுமைப்பெண் திட்டம் போல் மாணவர்களுக்கு ரூ. 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கும். திட்டங்களை கடைகோடி மனிதரிடமும் கொண்டு சேர்ப்பதற்கு அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் இருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதைப்பொருள் நடமாட்டம் என்பது ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்கு பிரச்சனை. 

போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதிக அளவில் இருக்கும் இடங்களை கண்டறியப்பட்டு பணிவானம் செலுத்தப்பட வேண்டும். 

போதை பொருள் பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலை உருவாக வேண்டும். மக்களுடன் முதலமைச்சர் என்ற திட்டத்தை வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பட்டா மாறுதல், சான்றிதழ்களை பெறுவதில் பொதுமக்கள் அடையும் பிரச்சனைகளுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin says drug traffic eradicated completely


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->