இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த கூட்டுறவுத்துறை.!
Co-operative Dept warning to ration shop employees
இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சீனி, எண்ணெய் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.
இதில், ஏழை, எளிய மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்கள் மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Co-operative Dept warning to ration shop employees