சாலையில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.! அடுத்தடுத்து நடந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசிய நாட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததை தொடர்ந்து அவர் வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

புவான் அனிதா என்ற பெண் தனது ஸ்கூட்டரில் மகளுடன் சென்று கொண்டு இருந்தார். அந்த ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் அவர்கள் மீது விழுந்துள்ளது. 

அந்த தேங்காய் சரியாக அனிதாவின் தலையில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்பாராத அவர் மயங்கி விழுந்துள்ளார். வாகனத்தை ஓட்டிவந்த மகள் வண்டியை நிறுத்திவிட்டு கீழே விழுந்த தாயிடம் சென்று பார்த்தார். 

அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்தப் பெண்களுக்கு உதவினார்கள் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட புவான் அனிதாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coconut falling on the head of a woman who went on the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->