பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளோடு ஆட்சியரை சந்தித்த மூதாட்டி.! அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மூதாட்டி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கையில்  பரிதவிப்புடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். மொத்தம் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை அவர் வைத்திருந்தார்.

அந்தக் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, "எனது பெயர் மாரியம்மாள். நான் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பஜனை கோவில் தெருவில் வசித்து வருகிறேன். எனது கணவர் சுந்தர்ராஜ். எனக்கு ஒரே மகன் செந்தில்குமார். இருவரும் இறந்து விட்டனர்.

மகன் செந்தில் குமார் லாரி டிரைவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணகிரிக்கு லாரி ஓட்டி சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டான். இதனால் நான் தனியாகதான் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு  நான் எனது வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்தேன். அப்போது எனது மகன் செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள கடைக்கு சென்றேன். அங்குள்ள கடைக்காரர் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவித்தனர். தற்போது இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் நான் தவித்து வருகிறேன்.

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் இந்த நோட்டுகளை உடனே எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர கோரிக்கை வையுங்கள் என்று தெரிவித்தார்கள். அதன்படி, நான் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.

கணவரையும் மகனையும் இழந்து தவிக்கும் எனக்கு இந்த பணத்தை மாற்றிக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து அந்த ரூபாய் நோட்டுகளை காண்பித்து அவற்றை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore collecter office public people Grievance Meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->