கோயம்பத்தூர் | தேசியக்கொடி ஆர்டர்! ரூ.4 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி!  - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர், பீளமேடு எல்லை பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி சித்ரா. இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் தனது நிறுவனம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஆர்டர் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 

அப்போது ஈரோடு, திங்களூர் அடுத்துள்ள பாதிபாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 48) என்பவர் திங்களூர் தபால் நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தான் தேசியக்கொடி ஆர்டர் எடுத்து வருவதாகவும் சித்ராவை சந்தித்து பேசியுள்ளார். 

பின்னர் அவரிடம் தேசியக் கொடியை காண்பித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய சித்ரா அய்யப்பனிடம் தேசியக்கொடி ஆர்டர் கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து சித்ராவிடம் அய்யப்பன் தனது மனைவி கவிதா வங்கி கணக்குக்கு முன்பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார். 

சித்ரா உடனடியாக கவிதாவின் வங்கி கணக்கிற்கு 3 லட்சம் முன்பனத்தை கடந்த நான்காம் தேதி அனுப்பியுள்ளார். மேலும் அவரது வங்கி கணக்கில் ஒரு லட்சம் அனுப்பியுள்ளார். 

அய்யப்பன் 2 நாட்களில் வேலையை முடித்து ஆர்டர் கொடுத்து விடுவதாக சித்ராவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு அய்யப்பனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

அவரது செல்போனுக்கு சித்ரா பலமுறை கால் செய்தும் அழைப்பு இணைக்கப்படாததால் சித்ரா நேரடியாக திங்களூர் சென்று அய்யப்பனிடம் இது குறித்து கேட்டுள்ளார். 

ஆனால் அய்யப்பன் ஏதோ காரணங்கள் சொல்லி நாட்களை கடத்தி வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை சித்ரா உணர்ந்து இது தொடர்பாக கோவை மேற்கு மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். 

இந்த புகார் நகல் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பின்னர் மாவட்ட போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்த திங்களூர் போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

புகாரின் பேரில் திங்களூர் போலீசார் அய்யப்பன் மற்றும் அவரது மனைவி கவிதா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore National flag order Husband and wife cheated 4 lakh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->