#கோவை || பிரதமரின் பேரணிக்கு சிக்கல்.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு.!!
Coimbatore police not given permission to Modi rally
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிலையில் நாளை கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பாஜக பேரணிக்கு கோவை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்க இயலாது என கோவை மாநகர் காவல் ஆணையாளர் சார்பாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரியுடன் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கள்ளும் பாஜக பேரணி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனை முடிவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணிக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Coimbatore police not given permission to Modi rally