கோவை : சிறுவனை தெருநாய்கள் கடிக்க முயன்ற விவகாரம் - 5 பேர் கொண்ட குழு அமைத்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியில், வீட்டின் வாசலில் நின்றிந்த சிறுவனொருவன் நாய்கள் மீது கல் எறிய முயன்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது அந்த சிறுவனை நோக்கி வேகமாக கடிக்க 4 தெருநாய்கள் சூழ்ந்துள்ளன. இதனை கண்டு பதறிய சிறுவன் அலறவே, மகனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை, நாய்களை விரட்டி தந்து மகனை காப்பாற்றினார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை வெள்ளலூரில் சிறுவனை தெருநாய்கள் கடிக்க முயன்ற விவகாரத்தில், வெள்ளலூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் உத்தரவில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

வெள்ளலூர் பகுதியில் உள்ள தெரு நாய்களைப் பிடிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு. பிடிக்கப்பட்ட நாய்கள் கோவையில் உள்ள 3 கருத்தடை மையங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 5 நாட்கள் மருத்து கண்காணிப்பில் இருக்கும்.

தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு நாய்கள் விடுவிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தனது உத்தரவில் தகவல் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Vellalore Street Dogs issue


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->