2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்! காரணம் என்ன?
Coimbatore woman tried commit suicide
கோயம்புத்தூர், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி லக்ஷிகா (வயது 23) இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
லஷிகா கணவரிடம் குழந்தைக்கு முடி வெட்ட சலூன் கடைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு கார்த்திகேயன் குழந்தைக்கு பழனி முருகன் கோவிலில் மொட்டை போட வேண்டும் முடி வெட்ட கூடாது என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து லக்ஷிகா குழந்தைக்கு அவரை முடிவெட்டியுள்ளார். இதனை பார்த்த கார்த்திகேயன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கார்த்திகேயன் வெளியில் சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த லஷிகா பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி உள்ளனர். இந்நிலையில் இருவரும் சிறிது நேரம் கழித்து வாந்தி எடுத்தனர்.
இதனை அடுத்து லஷிகா இது தொடர்பாக கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் உடனடியாக வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த மனைவி மற்றும் குழந்தையை மீட்டு அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு 2 பேருக்கும் மருத்துவர்கள் முதல் உதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் திட்டியதால் மனைவி, குழந்தை விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Coimbatore woman tried commit suicide