முதலமைச்சர் தலைமையில் ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு! இது தான் காரணம்! - Seithipunal
Seithipunal


தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி முதல் முறையாக மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. 

இதனை அடுத்து 2வது முறையாக இன்று, நாளை என 2 நாட்கள் முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டம் இன்று காலை 9:30 மணியில் இருந்து 11.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் நடைபெறுகிறது. 

இதனைத் தொடர்ந்து 12 மணி முதல் 1.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டமும், 5.30 மணி முதல் இரவு 7:30 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகின்றது. 

இந்த 2 நாள் மாநாட்டில் சட்ட ஒழுங்கு நிலை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு நிலைபாடுகளை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு, கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக பல்வேறு புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. 

இந்த மாநாட்டில் திட்டங்களை ஆய்வு செய்யவும் மேலும் அவற்றை சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Collectors Superintendents of Police conference by the Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->