தமிழக மாணவர்கள் கவனத்திற்கு! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மேலும் ஒரு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது;

நாளை (ஜூலை 03) முதல் ஜூலை 5-ம் தேதி வரை ‘https://tngasa.in’ என்ற இணையதளத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

உயர்கல்வித்துறை உத்தரவின் படி, வரும் ஜூலை 8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தனை வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தற்போதுவரை தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், உயர்கல்வித்துறை உத்தரவின் படி, ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறோரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் அந்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College Students Admission ArtsAndScience TNGovt Govt Colleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->