4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்!
coming17th 4 districts Ration shops open
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 3,4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையே சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் 3 கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிவாரண உதவி தொகை வழங்குவதற்கு டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற
4 மாவட்டங்களில் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படுவதற்காக ரேஷன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
English Summary
coming17th 4 districts Ration shops open