தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
Commercial Tax and Registration Department income 2023
வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மொத்த வருவாயாக ரூ.1,17,458.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "வணிகவரித்துறையில் நடப்பு நிதியாண்டில் பிப்ரவர் 28 வரையிலான மொத்த வருவாய் ரூ.1,17,458.96 கோடி ஆகும்.
கடந்த ஆண்டின் இதே நாளில் இத்துறையின் வருவாய் ரூ. 92,931.57 கோடி ஆக இருந்தது. இவ்வகையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் இதே நாளில் ரூ.24,527.39 கோடி வருவாயை வணிகவரித்துறை அதிகமாக ஈட்டியுள்ளது.
பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவின் மூலம் பெறப்படும் வருவாய் நடப்பு ஆண்டில் வரலாற்று சாதனையை எட்டியுள்ளது. நடப்பாண்டில் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.15,684.83 கோடி ஆகும்.
கடந்த ஆண்டு இதே நாளில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ. 12,161.51 கோடியை விட ரூ.3,523.32 கோடி அதிகமாக நடப்பு ஆண்டில் பதிவுத்துறையால் வசூலிக்கப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு கூட்டங்களினாலும் இத்துறைகளின் வருவாய் அதிகரித்து வந்துள்ளது" என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
English Summary
Commercial Tax and Registration Department income 2023