கோயம்பேட்டில் பரபரப்பு!....தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்!
Commotion in koyambedu Police attack on people who were sleeping
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பிரதான பேருந்து நிலையமாக இயங்கி வந்த நிலையில், வெளியூர் மற்றும் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இயங்கி வருகிறது.
மேலும் சென்னையின் மாநகர பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று செல்வதோடு, பணிமனையாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு 50க்கும் மேற்பட்டோர் தூங்கிக்கொண்டிருந்த போது அங்கு வந்த போலீசார், பேருந்து நிலையத்திற்குள் உறங்கக்கூடாது என கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆதரவின்றி தங்கிய தங்களை பேருந்து நிலையத்தின் உள்ளே தங்கக்கூடாது எனக்கூறி போலீஸ் தாக்கி துரத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போலீசாரை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால், பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது.
English Summary
Commotion in koyambedu Police attack on people who were sleeping