திண்டுக்கல் அருகே பரபரப்பு!...ஓடும் பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு!..பயணிகள் நிலை? - Seithipunal
Seithipunal


ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டின் பக்கவாட்டு பகுதி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் இடையே அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இயங்கும் இந்த பேருந்தானது,  ஒட்டன்சத்திரத்தில் இருந்து  கல்லுப்பட்டி வழியாக வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது.

இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், வேடசந்தூர் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து நுழைந்தபோது, பேருந்தின் பின்பக்க படிக்கட்டின் பக்கவாட்டு பகுதி திடீரென பலத்த சத்தத்துடன் உடைந்து விழுந்தது.

இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்ததை அடுத்து, பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டு பின்னர் உடனடியாக  பேருந்தில் இருந்த பயணிகள் மிகுந்த கவனத்துடன் இறங்கினர். பின்னர் படிக்கட்டில் இருந்து உடைந்த பாகங்களை சேகரித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிமனை நோக்கிச் சென்றனர். இதனால் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Commotion near Dindigul Staircase collapsed in a running bus Passenger condition


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->