ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தல் நாளை பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்க இருக்கிறார்.

இதற்கிடையே, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுத்துவிட்டார். இதற்காக ஆளும் திமுக அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இந்த நிலையில், நாளை பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல உள்ள ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது, மதுரையில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகம் செல்லும் வழியில் உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தியாகி சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இதன் காரணமாக அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மதுரை மாநகர போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையே, இன்று பிற்பகல் காமராஜர் பல்கலைக்கழகம் சென்ற மதுரை எம்.பி சு.வெங்கடேசன், நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அரங்கேற்க உள்ள பெரியார் பற்றிய நாடகத்தின் ஒத்திகையை கண்டு ரசித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) வலைதளத்தில், ஆளுநர் வருகையை முன்னிட்டு, பெரியார் நாடகம் நடத்தப்படுவது என்னவொரு பொருத்தம். காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரிக்கு வாழ்த்துகள்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

communiest party black flag hoisting againt governor R N Ravi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->