நான் கூட பிரதமர் ஆகலாம் - திமுக கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணி முடிவு எடுத்தால் நான் கூட பிரதமர் ஆகலாம் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக, நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஐஎன்டிஐஏ  என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணியில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. பெரும்பாலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், சிவகாசியில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், இந்திய கூட்டணி முடிவு எடுத்தால் நான் கூட பிரதமர் ஆகலாம்.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை.

பொருத்தமான ஒருவர் நிச்சயமாக பிரதமராக வருவார். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளது பொருத்தமற்றது" என்று  மூத்தரசன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Communist Mutharasan say about PM Candidate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->