முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்.. உச்சநீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக, சுமார் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பலரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதில் தன்னையும் ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட காவல் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்தனர். இதற்கிடையே ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி ராஜேந்திர பாலாஜி முதல் தலைமறைவானார்.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது. 

இதனையடுத்து, கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 12 ஆம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது. மேலும், விருதுநகரை விட்டு ராஜேந்திர பாலாஜி வேறெங்கும் செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

conditional bail for rajendra balaji


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->