கந்து வட்டி கேட்டு மிரட்டல் - காங்கிரஸ் பிரமுகர், பஞ்சாயத்து துணை தலைவருக்கு போலீசார் வலைவீச்சு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, களக்காடு அருகே உள்ள கீழ துவரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50) இவர் அதே பகுதியைச் சேர்ந்த கணபதி மனைவி ராணி (வயது 60) என்பவரிடம் கடனாக 1 லட்சத்து 60 ஆயிரம் வாங்கியுள்ளதாகவும் அதற்காக மாதந்தோறும் ரூ.9000 வட்டி கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. 

இந்நிலையில் ஜெயக்குமார் கடந்த மாதம் வட்டி பணம் ரூ. 3,500மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை பின்னர் தருவதாக தெரிவித்திருந்தார். 

இதனால் நேற்று முன்தினம் ராணி அவரது கணவர், மகள், மருமகள் என 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசி கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதனால் மனமடைந்த ஜெயக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

தற்போது அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராணி, கணபதி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ராணி உள்பட 3 பேர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணி இதற்கு முன்னதாக தெற்கு மீனவன் குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவரிடம் கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 

காங்கிரஸ் பிரமுகரான அவர் சமீபத்தில் தான் ஜாமினில் வெளிவந்தார். இவரது மருமகள் கள்ளக்குளம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Panchayat voice president against case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->