தமிழக எம்.பி.,க்கு கொரோனா!  - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு நேற்றைய தினம் 5 ஆயிரத்தை தாண்டியது. 

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்தியா முழுவதும் 6,050 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 3,320 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தினசரி பாதிப்பு விகிதம் 3.39% ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.02% ஆகவும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 28,303 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

நேற்று, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்-க்கு கொரோனா தோற்று ஏற்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

திருவள்ளூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எம்.பி ஜெயக்குமார் டெல்லியில் உள்ள அவரின் இல்லத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP Jayakumar Coronavirus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->