எல்லையம்மன் கோவில் கட்டுமான பணி..தொகுதி எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!
Construction of Ellaiamman Temple. Constituency MLAs surprise inspection
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ எல்லையம்மன் கோவில் தேவஸ்தானம் கட்டுமான பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பார்வையிட்டு சிறப்பு பூஜையில் அம்மனை தரிசனம் செய்தார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட எல்லையம்மன் வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் தேவஸ்தானம் கட்டுமான பணியை திமுக மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கோவில் நிர்வாகியுடம் நேரில் சென்று பார்வையிட்டார.
பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கு கொண்டு அம்மனை வணங்கி தரிசனம் செய்தார். அறநிலையத் துறையிடம் இருந்து கட்டுமான பணிக்காக நிதி உதவி அரசிடம் பெற்று தருவதாக சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஹரிகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் செல்வம் ,சந்துரு ,இருதயராஜ் ,ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Construction of Ellaiamman Temple. Constituency MLAs surprise inspection