கடன் வாங்கியவர் உயிரிழந்ததால் ஜாமீன்தாரரின் கணக்கிலிருந்து பணம் எடுத்த வங்கி.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கடன் வாங்கியவர் உயிரிழந்ததால் ஜாமீன்தாரரின் கணக்கிலிருந்து பணம் எடுத்த வங்கி.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லின் செல்வ ஜோஸ். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு அதே பகுதியில் இருக்கும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் ஓய்வூதியக் கணக்கு உள்ளது. 

அதனால், சார்லின் செல்வஜோஸ் தனது நண்பர் ராமையா வாங்கிய கடனுக்கு ஜாமீன் தாரராக கையெழுத்துப் போட்டுள்ளார். இதற்கிடையே ராமையா வாங்கிய கடன் பாக்கி நிலுவையில் இருக்கும் போதே அவர் உயிர் இழந்துவிட்டார்.

இந்த நிலையில் வங்கியில் இருந்து எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல், ராமையா கடன் பெற ஜாமீன் கையெழுத்துப் போட்ட சார்லின் செல்வ ஜோஸ் கணக்கில் இருந்து மீதி பணம் எடுக்கப்பட்டது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான சார்லின் இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த வழக்கை விசாரணை செய்த ஆணையத் தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு தொடர்ந்ததற்கான செலவுத் தொகையாக ஐந்து ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர். 

அதுமட்டுமல்லாமல், சார்லின் செல்வஜோஸின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 79 ஆயிரத்து 841 ரூபாயை ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

consumer court fined to bank for collecting money guaranter account


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->