சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்றி வந்த 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பணி காலம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கான பணிக்காலம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஒப்பந்த செவிலியர்கள் கடந்த 6 நாட்களாக தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்கள் தேடி மருத்துவம் திட்டத்திலும் ஒப்பந்த முறையில் பணியமத்தப்படுவார்கள் என உறுதியளித்தது. ஆனால் கொரோனா காலங்களில் உயிரை துச்சம் என நினைத்து பணியாற்றிய தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை தமிழக அரசு ஏற்க மறுத்ததால் கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்ந்து 6 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த செவிலியர்களை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Contract nurses arrested in protest at Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->