அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகும் ஒப்பந்த செவிலியர்கள்...!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் ஒப்பந்த பணி காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. 

இதனால் ஏமாற்றமடைந்த ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த செவிலியர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் வரும் ஜனவரி 9ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்படும் என ஒப்பந்த செவிலியர்கள் போராட்ட குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Contract nurses preparing for next stage of struggle


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->