கூல் லிப் விவகாரம்! தமிழக அரசு, மத்திய அரசு, நிறுவனங்களுக்கு சிக்கல்? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!
Cool Lip Drugs Case HC Division order TNGovt Central Govt
கூல் லிப் போதை பொருள் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.
போதைப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
கூல் லிப் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக இளம் தலைமுறையினரை பாதிப்புக்கு உள்ளாக்கும் என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து போதை பொருள் தொடர்பான வழக்கை வருகின்ற செப்டம்பர் 25ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 9 மாதங்களில் தடைசெய்யப்பட்ட போதை பொருளை விற்பனை செய்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், 132 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 36 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் போதை பொருட்களில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை என்று தெரிவித்தனர்.
English Summary
Cool Lip Drugs Case HC Division order TNGovt Central Govt