பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பா? தமிழக அரசு தரப்பில் பரபரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


பழனி பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தப்படக்கூடிய நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக ஒரு செய்தி வைரலாகிய நிலையில், இது உண்மை அல்ல என்று தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வக பரிசோதனைகள் உறுதியானது.

மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய நெய்யில் தான் இந்த விலங்கு கொழுப்புகள் கலக்கப்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு முடிகள் தெரிய வந்தது.

இதற்கிடையே, திருப்பதி கோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் நெய் வழங்கிய திண்டுக்கல் சேர்ந்த ஏஆர் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் தான், தமிழகத்தின் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் வழங்கியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது. 

குறிப்பாக பாஜகவை சேர்ந்த ஒரு நிர்வாகி இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தத்திலும் இந்த நெய் கலக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. 

இந்த நிலையில், தமிழக அரசு தமிழக அரசின் உடைய உண்மை சரி பார்க்கும் குழு, இதனை முற்றிலுமாக மறுத்து, உண்மைக்கு மாறான தகவல் என்று தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்த செய்தி குறிப்பில், பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து பெறப்படுவதாக அறநிலை துறை விளக்கம் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani Panchamirtham issue TNGovt Statement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->