தீவிரமாகும் கொரோனா.. வழக்கம் போல முதலிடம் பிடித்த மாநிலம்.! தமிழகத்தின் நிலை என்ன.?!
corona cases a slight increase in patients who take treatment in hospital
நாடெங்கிலும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியிருந்த கொரோனா தொற்று சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவத்துறை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதிலும் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிற்கு அதிகபட்சமாக சிகிச்சை பெற்று வரும் நபர்களின் பட்டியலில் கேரளா முதலிடத்திலுள்ளது. இங்கு 2877 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் 2343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்திலும் 660 பேர் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பேணி நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சமூக விழிப்புணர்வுடனிருக்க வேண்டும் எனவும் மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
English Summary
corona cases a slight increase in patients who take treatment in hospital