கொரோனா தொற்றில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50000 இழப்பீடு.! அரசாணை வெளியீடு.!
corona fund for family who missed family member in corona
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வருகின்றது. இது பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மிக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இது பொருளாதத்தில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. மத்திய மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. போக்குவரத்துகள் முடக்கப்பட்டு, திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கியது.
இதானால் பலரும் தங்களது பெற்றோரை இழந்து அனாதையாக மாறினார். இப்படி கொரோனாவுக்கு உறவினர்களை பலிகொடுத்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.50000 வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது
அதன்படி தற்போது அரசு அறிவித்துள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் வாரிசுகளுக்கு இழப்பீடாக ரூ.50000 நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்படுகிறது. ₹50,000 இழப்பீடு பெற https://t.co/pPqbREyQkj என்ற தமிழக அரசின் அலுவல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்." என்று தெரிவித்துள்ளது.
English Summary
corona fund for family who missed family member in corona