அம்மா உணவகத்தில் அதிகரிக்கும் கள்ள நோட்டுக்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


அம்மா உணவகத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ள நோட்டுகள் சேர்வதால் தங்கள் சொந்த பணத்தை போடும் ஊழியர்கள் கவலை:

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் வரும் தொகையை மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று அம்மா உணவகத்தில் வசூலான பணத்தை அங்குள்ள ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மக்கள் சேவை மையத்தில் செலுத்த சென்றுள்ளனர். 

அப்போது பணத்தை சரிபார்க்கும் இயந்திரத்தம் பரிசோதிக்கும் போது அதில் 10 ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அம்மா உணவக ஊழியர்கள் அதிர்ச் அடைந்தனர்.

பின்னர் அதற்கான பணத்தை தங்கள் வைத்திருந்ததை போட்டு சமாளித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கள்ள நோட்டு வந்துள்ளது. 

300 ரூபாய் வரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கள்ள நோட்டுக்கள் வந்ததால் ஊழியர்கள் அதற்காக தங்கள் சொந்த பணத்தை போட்டுள்ளனர். 

அதே சமயம் ஊழியர்களிடம் சிக்கிய 10 ரூபாய் கள்ள நோட்டை உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி, இதன் பெயர் கள்ள நோட்டு என எழுதி நூல் கட்டி தொங்க விட்டுள்ளனர். 

இது குறித்து அம்மா உணவக ஊழியர்கள் தெரிவிக்கையில், ''தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அம்மா உணவகத்திற்கு வந்து உணவு சாப்பிடுகின்றனர். 

கள்ள நோட்டுப் புழக்கம் கடந்த ஒரு வாரமாகவே இருந்து வருவதால் பொதுமக்கள் யார் மீதும் சந்தேகப்பட முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வாக பணம் எண்ணும் எந்திரம் இருந்தால் கள்ள நோட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும்'' என்று தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Counterfeit notes increasing in Amma restaurant Employees in shock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->