இலங்கை செல்ல முயன்ற தம்பதிகள் கைது..விமான நிலையத்தில் பராபரப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு விமானத்தில் செல்ல பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்துவரும் ராமச்சந்திரன் அவரது மனைவி ஹனீஷா ஆகியோர் வந்தனர். விமான நிலைய குடிஉரிமை அதிகாரிகள் அவர்களது பாஸ்போர்ட்கள் மற்றும் ஆவணங்களை பரிசோதித்தனர்.

இருவரும் இந்திய பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்தனர். ஆனால், இலங்கை தமிழர்கள் போல் பேசினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் இருவரிடையே விசாரணை நடத்தினர் 


விசாரணையில் இருவரின் பூர்வீகம் இலங்கை என்பதும் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வாழ்ந்ததாகவும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் இருப்பதாகவும் இந்த ஆவணங்கள் மூலமாக இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகும் கூறியுள்ளனர். ஆனாலும் குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

போலியான ஆவணங்கள் தயாரித்து ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து போலி இந்தியா பாஸ்போர்ட் வாங்கி வைத்து இருப்பதாக கூறி இருவரையும் பயணத்தை ரத்து செய்தனர். இது தொடர்பாக, சென்னை விமான போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple go to Sri Lanka arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->