சவுக்கு சங்கருக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி, கோவை 'சைபர் கிரைம்' போலீசார் சவுக்கு சங்கரை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்த ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் கடந்த 10-ந்தேதி கோவையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இந்த நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதைத்த  தொடர்ந்து, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை நான்காவது  குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court custody extend to savukku sangar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->