ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்துக்கு இடைக்கால தடை; நீதிமன்றம் உத்தரவு..!
Court orders interim stay on strike by JACTO GEO
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். ஆனால், இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்ரல் -23 வரை தடை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற (ஐகோர்ட்) கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில் மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த நீதிமன்றம் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கை குறித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமாறு அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மதுரை உயர் நீதிமன்ற கிவைத்துள்ளது. அத்துடன் அதுவரை போராட்டம் நடத்த தடையை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court orders interim stay on strike by JACTO GEO