பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு.!! நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2007 முதல் 2011 வரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தி செம்மண் குவாரி உரிமம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரது மகன் கௌதம சிவகாமணி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக குவாரி உரிமம் வழங்கியதாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அமைச்சர் பொன்முடி அவருடைய மகன் கௌதம சிகாமணி வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்லட்சக்கணக்கான வெளிநாட்டு பணங்கள், கோடிக்கணக்கான மதிப்பீட்டில் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தாசில்தார் குமாரபாலன் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆஜராக வேண்டும் என விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court orders Tahsildar to appear in ponmudi quarry case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->