குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை! விரக்தியில் சுற்றுலா பயணிகள்!
Courtallam falls Bathing prohibited
தென்காசி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் போன்ற அருவிகளிலும் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசார் குளிக்க தடை விதித்துள்ளனர்.
அதிக அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீரில் மண் மற்றும் கற்கள் போன்றவை அடித்து வரப்பட்டது.
மேலும் அருவி பகுதியில் உள்ள இரும்பினால் ஆன காவல் கண்காணிப்பு மையம் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்து காணப்படுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு உரிய நேரத்தில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Courtallam falls Bathing prohibited