வெள்ளப் பெருக்கு அபாயம் : குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.!
Coutrallam Falls bathing Ban
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமாரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் நீலகிரி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம், ஐந்தருவி போன்ற அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Coutrallam Falls bathing Ban