பள்ளி மாணவிகளுக்கு கண் கை கால் செயலிழப்பு.. தடுப்பூசியால் ஏற்பட்ட விபரீதம்.. காரணம் என்ன.?
Covid Vaccinne side effects
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மாணவிகள் 2 பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் எள்ளுப்பாறை பகுதியைச் சேர்ந்த யோகலட்சுமி சோளிங்கரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்படி பள்ளியில் யோகலட்சுமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற யோகலட்சுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யோகலட்சுமிக்கு திடீரென பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர் மணிமாறனிடம் கேட்டபோது பள்ளி மாணவிக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் கண்பார்வை போக வாய்ப்பில்லை என்றார். பெற்றோரின் வம்சாவளி மரபணு மாற்றத்தின் காரணமாக கண் பார்வைத்திறன் இருந்திருக்கலாம் என சான்று வழங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.
அதனடிப்படையில் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாணவியை சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார். இதனிடையே அதே பள்ளியில் தடுப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டதால் மாணவி பிரியதர்ஷினி இரண்டு கால்களும் செயலிழந்து எழுந்து நிற்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாணவி பிரியதர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டதா என மருத்துவர்கள் குழு அறிக்கை மூலம் தெரிய வரும் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
English Summary
Covid Vaccinne side effects