ஜூனியர் விகடன் மீதான வழக்கு : ஆளும் திமுகவின் கூட்டணி கட்சி குமுறல்.!
cpim vay about some junior vikadan case
ஜூனியர் விகடன் மீதான வழக்கினை கைவிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு சி.பி.ஐ(எம்) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலசெயலாளர் கே பழகிருஷ்னன் விடுத்துள்ள அறிக்கையில்,
"ஒரு தனியார் நிறுவனத்திடம் ஜூனியர் விகடன் இதழின் பெயரைப் பயன்படுத்தி, ஒரு தனி நபர் மிரட்டி பணம் கேட்டார் என்கிற புகாரின் பேரில் அந்த நபர் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஜூனியர் விகடன் இதழ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், ஒரு தனியார் நிறுவனம் கொடுத்த வழக்கை பயன்படுத்தி ஜூனியர் விகடன் இதழ் குறிவைக்கப் படுகிறதா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது.
அதிகாலை கைது செய்வது, பத்திரிக்கை மேல் வழக்கு போன்ற காவல் துறை நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்க முடியாதவை.
காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப் பட கூடாது என்றும், தமிழ்நாடு அரசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக் குழு வலியுறுத்துகிறது"
இவ்வாறு அந்த அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
English Summary
cpim vay about some junior vikadan case