"சூறைக்காற்றால் பயிர்கள் நாசம்; புதுக்கோட்டை!
Crops Getting Affect By cyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜீன் 7 அன்று இரவில் சூறைக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த சூறைக் காற்றால் மாங்காடு, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்களும், 100 ஏக்கர் நெற்பயிரும் மற்றும் சோளம் முதலான பயிர்களும் மிகுந்த சேதமடைந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், சூறைக் காற்றால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு ஏதும் அரசு வழங்குவதில்லை. இம்முறை ஏற்பட்ட சேதத்தினை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன், சூறைக் காற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை கள்ளக்குறிச்சி, கருக்காகுறிச்சி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சேதம் பற்றிய கணக்கெடுப்பை உரிய அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.
இந்த சூறைக்காற்றில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிதி வழங்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளின் இழப்பீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட சூறைக்காற்றால் பயிர்கள் மரங்கள் வாழைகள் என்று பல்வேறு இழப்பீட்டை எங்கள் மாவட்டம் அமைந்துள்ளது. எங்களுக்கான இடைப்பீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று அம்மாவட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.
English Summary
Crops Getting Affect By cyclone