கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது - மீன்வளத்துறை அதிரடி உத்தரவு.!!
cuddalore fisher mans not go to sea Fisheries Department order
கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது - மீன்வளத்துறை அதிரடி உத்தரவு.!!
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதற்குத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடலூர் மீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வங்கக் கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
cuddalore fisher mans not go to sea Fisheries Department order