கடலூர்: ரவுடி வங்கி கணக்கில் குவிந்த ரூ.80 லட்சம்! தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் ஒரே மாதத்தில் குவிந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், பெரியங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு, கடலூர் முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்று இருந்துள்ளது. 

இந்த வங்கி கணக்கில் கடந்த ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூபாய் 10 லட்சம், ரூபாய் 20 லட்சம், ரூபாய் 50 லட்சம் என பணம் வந்து கொண்டே இருந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 250 லட்சம் ருபாய் அவரின் கணக்கிற்கு வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த கனரா வங்கி நிர்வாகம், உடனடியாக காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறைக்கு வங்கி தரப்பில் இருந்த தகவலை தெரிந்து கொண்ட ரவுடி அசோக் குமார், உடனடியாக தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை, தனது நண்பர்கள் ஏழு பேருக்கு ஆன்லைன் மூலம் பிரித்து அனுப்பியதாக தெரிகிறது. 

தற்போது போலீசாரின் விசாரணை மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, தலைமுறைவாக உள்ள அசோக்குமார் வங்கி கணக்கில் 50 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் இருப்பதாகவும், அவரின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தலைமறைவாக உள்ள அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்ட ஏழு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ரவுடி அசோக் குமாருக்கு பணம் அனுப்பியவர்கள் யார்? எதற்காக அவர்கள் பணம் அனுப்பினார்கள்? ஏதேனும் முக்கிய அரசியல் தலைவர் அல்லது தொழிலதிபரை கொலை செய்வதற்காக இந்த பணம் கூலியாக அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரவுடி அசோக்குமார் மீது ஏற்கனவே அடிதடி, கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போலீசார் இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Rawdy Ashok Bank Balance Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->