#கடலூர் : கரும்பு வெட்ட போன இளைஞர்.. காரில் பிணம்.. அதிர்ந்து போன குடும்பம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகில் ஜெயங்கொண்டான் எனும் கிராமத்தில் வசித்து வரும் 38 வயதான ஸ்டாலின் என்பவர் கரும்பு வெட்டுவதற்காக ஆந்திராவுக்கு சென்றுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் தன்னுடைய குடும்பத்தாருடன் அவர் பேசி வந்துள்ளார்.

சமீபத்தில் சில நாட்களாக ஸ்டாலினுடன் குடும்பத்தினரால் பேச முடியாமல் போனது. இதனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் திடீரென்று ஸ்டாலினின் பிணம் காரில் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பம் என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் போலீசாரிடம் விசாரணை நடத்தச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.

நல்ல நிலையில் வேலைக்குச் சென்ற வாலிபர் பிணமாக வீட்டிற்கு திரும்பிய சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Village young men Mystery death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->