அதிகரிக்கும் கொரோனா பரவல்!! தமிழ்நாட்டில் ஊரடங்கு வருமா? பொது சுகாதாரத்துறை இயக்குனரி பதில்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை தற்பொழுது 250ஐ தாண்டி உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,216ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 82 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களில் 90% பேர் ஒமைக்ரான் XBB வகை கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ கலர் பணியாளர்கள் என அனைவரும் கட்டாயம் முகம் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கொரோனா பரவல் குறித்து பேசியதாவது " உருமாற்ற வைரஸ் வகை அதிக அளவில் பரவினாலும் மிதமான பாதிப்பையே ஏற்படுத்து வருகிறது. ஆனால் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சில இணை நோய்களும் இருந்ததால் அவர்கள் இறந்திருக்கலாம். பொதுமக்கள் சுய கட்டுப்பாடுடன் முக கவசம் அணிய வேண்டும். முக கவசத்தை கட்டாயமாக்கும் எண்ணம் இதுவரை இல்லை எனினும் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போதிய அளவுக்கு படுக்கை வசதிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது வரை ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை, தற்போதைய சூழலுக்கு ஊரடங்கு தேவையும் இல்லை" என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Currently there is no lockdown in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->