சென்னை விமான நிலையத்தில் பார்சலில் வந்த போதைப்பொருட்கள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு சரக்கக தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, தபால் பிரிவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வெளிநாட்டில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த பார்சலில் பரிசுப்பொருட்கள் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது. அந்த பார்சல் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதில் இருந்த முகவரியை ஆய்வு செய்ததில் அந்த முகவரி போலி என்பது தெரிய வந்தது. 

அதன் பின்னர் அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் விலை உயர்ந்த பச்சை நிறத்தில் 250 போதை மாத்திரைகள் மற்றும் 75 போதை ஸ்டாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதையடுத்து இந்த பார்சலை கேட்டு வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விலையுர்ந்த போதை மாத்திரைகள் மற்றும் ஸ்டாம்புகள் நீண்ட நேரம் போதையில் இருக்க செய்யும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Customs Officer seized drugs in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->