மாண்டஸ் புயல் எதிரொலி : மிக கனமழை, சூறை காற்று எச்சரிக்கை - விடுத்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்!
Cyclone Mandous alert TN Rains Weather Update
மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க கூடும் என்றும், வட தமிழக கடற்கரை பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 460 கி.மீ. தொலைவிலும் புயல் நிலைகொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில், "தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டாவில் இன்று மிக கனமழை பெய்யும்.
சென்னையில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10ம் தேதி கனமழை பெய்யும் என்று, பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Cyclone Mandous alert TN Rains Weather Update